காஷ்மீரின் கர்னா பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள சிமாரி கிராமம் முழுவதும் சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
300-க்கும் மேற்பட்டோர் வாழும் சிமாரி கிராமம், முன்னதாக விறகு மற்றும் மண்ணெண்ணெய்யைப் பெரிதும் நம்பியிருந்தது.
இங்கு மின் பற்றாக்குறையால் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்திய ராணுவம் மற்றும் அசீம் அறக்கட்டளையின் கூட்டு முயற்சியின் மூலம், முழுமையான சோலார் மின்சாரம் கொண்ட கிராமமாக சிமாரி மாறியுள்ளது. மேலும், தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் எல்பிஜி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.