திமுக என்றுமே பெண்களுக்கு எதிரான கட்சி என்றும், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அவரளித்த பேட்டியில், திமுக என்றுமே பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும் 2026ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று நயினார் நாகேந்திரன் உறுதியாக தெரிவித்தார்.