இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம்தான் முதலில், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் என ஜார்கண்ட் அமைச்சர் ஹஃபிசுல் அன்சாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் அமைச்சரான ஹஃபிசுல் அன்சாரி அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒரு இஸ்லாமியருக்கு இஸ்லாமிய சட்டமுறையான ஷரியத் சட்டம்தான் முதலில் எனவும், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டமெல்லாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் ஷா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஷரியத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு மேல் வைத்து பார்ப்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் கதவுகள் திறந்திருக்கும் என ஜார்கண்ட் மாநில பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பின் கீழ்தான் இந்தியா இயங்கும் எனவும், அதுவே எப்போதும் உயர்ந்ததாக இருக்கும் என்றும் அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.