புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டியில், ’நல்லேர் பூட்டும்’ விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது.
சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டி விளைநிலங்களை உழுது வழிபட்டால் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டியில் 35ஆம் ஆண்டாக ’நல்லேர் பூட்டும்’ விழா நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று, அந்த பகுதியில் உள்ள அய்யனார், சப்பானி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தானியங்களை வைத்து வழிபட்டனர். பின்னர், காளை மாடுகளைக் கொண்டு நல்லேறு பூட்டி, விளைநிலத்தை உழுதனர்.