தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த பாக்யலட்சுமி, காவியா ஆகிய இருவர் ஒகேனக்கல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி சிறுமிகளின் சடலத்தை மீட்டனர்.