முன்னாள் பிரச்சாரகரும், நியூரோ தெரபி நிபுணருமான சுந்தரராஜன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தில், சுந்தரராஜன் மறைவு செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 1982-98 வரை சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தவர் என்றும், 1999ல் மும்பையில் நியூரோ தெரபி கற்று, தமிழகத்தில் 600 பேருக்கு பயிற்சி அளித்தவர் என்றும் கூறியுள்ளார்.
2002ல் சேலத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்தை தொடங்கி அன்புடனும், மென்மையாகவும் பழகி, 25 ஆண்டுகளாக சங்கல்பம் கொண்டு, செருப்பு கூட அணியாமல் பலருக்கு வைத்தியம் செய்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.