ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி சாதனை படைத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து, அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதுபெற்ற வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.