திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த கோமதி என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு மீண்டும் திண்டுக்கல்லுக்கு செல்ல ரயிலில் ஏறியுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உறவினர் அளித்த தகவலின் பேரில், மணப்பாறை ரயில் நிலையத்தில், பெண்ணை இறக்கிவிட்டு ஆம்புலன்சுக்கு டிக்கெட் பரிசோதகர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் பெண்ணை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.