திருவண்ணாமலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில், விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானம் குறித்து ஊழியர்களிடம் வாடிக்கையாளர் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேட்டவலம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், சந்தோஷ்குமார் என்பவர் குளிர்பானம் வாங்கி உள்ளார். அந்த குளிர்பானம் காலாவதியாகி 11 நாட்கள் ஆனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அது குறித்து ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ஊழியர்கள், சரியாகக் கவனிக்கவில்லை என்று அலட்சியத்துடன் பதில் கூறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.