சேலத்தில் இருசக்கர வாகன ஓட்டியைத் தவறான சொற்களால் திட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
மேச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த திருவண்ணாமலை என்பவர், சாலையில் விபத்து ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவரை செல்போனில் தொடர்புகொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், வாகனத்தைக் காவல் நிலையத்திற்கு எடுத்துவருமாறு கூறி தவறான சொற்களால் திட்டினார்.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, கோவிந்தராஜ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.