தேர்தல் சமயத்தில் மட்டும் கச்சத்தீவு மற்றும் நீட் பிரச்சனைகளைக் கையில் எடுக்கும் திமுக அரசை, மக்கள் இனிமேலும் நம்பமாட்டார்கள் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய அமைச்சர் பொன்முடியை, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு எனவும், அவரது அமைச்சர் பதவியை முதலமைச்சர் பறிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.