வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே உள்ள காட்டுக் கொள்ளை கிராமத்தில் நான்கு தலைமுறையாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அந்த இடத்துக்கு ஜமாஅத் உரிமை கோருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியது.
வேலூர் மாவட்டம் காட்டுக் கொள்ளை கிராமத்தில் 150 குடும்பங்கள், நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதி விரிஞ்சிபுரம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி, பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நவாப் மசூதி மற்றும் ஹசரத் சையத் அலி சுல்தன் ஷா தர்காவை சார்ந்த சையத் சதாம் என்பவர் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே முறையாக வரி செலுத்தும் நிலையில், இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்கள் முறையிட்டனர்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். நான்கு தலைமுறையாக காட்டுக்கொள்ளையில் வசிக்கும் நிலையில், திடீரென ஜமாத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வரி கட்ட வேண்டும் என்றும், அந்த இடம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்றும் உரிமை கோருவது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.