ஏழை, எளிய இஸ்லாமியர்களை மனதில் வைத்து பிரதமர் மோடி வக்ஃபு வாரிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகவும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி இதனை வரவேற்பதாகவும் அதன் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா சாலையில் அவர் அளித்த பேட்டியில்,
வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்குத் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளிப்பதாகவும், இந்த சட்டத்தை முழு மனதோடு வரவேற்கிறேன் என ஷேக் தாவூத் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் மூலம் வக்பு ஆவணங்கள் அனைத்தும் வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும் என்றும் குளறுபடிகளைக் களையும் விதமான சட்டம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றபட்டுள்ளது என ஷேக் தாவூத் தெரிவித்தார்.
இதுவரை வக்பு நிலத்தின் மூலம் பெறப்பட்ட பணம் ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை என்றும் மத்திய அரசின் சட்டம் மூலம் இனி வக்பு சொத்துக்களில் கிடைக்கும் பணம் ஏழை இஸ்லாமியர்களைச் சென்றடையும் என அவர் கூறினார்.
இதுவரை ஒரு சிலர் மட்டுமே வக்பு சொத்துக்களின் மூலம் பெறப்படும் நன்மைகளை அனுபவித்தனர் என்றும் வக்பு வாரியத்தில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் உள்ளது என்று ஷேக் தாவூத் குறிப்பிட்டார்.