மே 2-ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் மே 2-ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
செயற்குழு உறுப்பினர்களுடன் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.