தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென் மேற்கு பருவமழை பல்வேறு வட மாநிலங்களுக்குத் தேவையான மழைப்பொழிவை வழங்கும். இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை சராசரி அளவைவிடக் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடமாநிலங்களில் தென் மேற்கு பருவமழை சராசரியை விட 33 சதவீதம் அதிக மழைப்பொழிவைத் தரும் எனவும், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிடக் குறைவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.