திருப்பூரில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் அமைக்க முறையான அனுமதியின்றி, வெடி வைத்துக் குழி தோண்டிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்குள்ள பெருமாள் கோயில் பின்புறம் மாநகராட்சி சார்பில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் அதிக பாறைகள் தென்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர்கள், முறையான அனுமதியின்றி வெடி வைத்துத் தகர்த்து அங்குக் குழி தோண்டியுள்ளனர்.
இதில் அப்பகுதியில் வசித்து வந்த மேரி என்பவரின் வீட்டில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.