கன்னியாகுமரியில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைகளை காரணம் காட்டி, மீனவ கிராமங்களுக்கு வரும் அரசு நலத்திட்ட உதவிகளைத் தடுக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஹெலன் நகரின் சில பகுதிகளை, கிராம ஊராட்சிக்குள் கொண்டுவர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாகக் கோரிக்கை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பிரச்சனைகளை காரணம் காட்டி மீனவ கிராமத்திற்கு வரும் அரசு நலத்திட்ட உதவிகளை அரசு அதிகாரிகள் தடுப்பதாகக் குற்றச்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.