நாமக்கல்லில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்.
தனது ஆம்னி வேனில் தீப்பற்றுவதைக் கண்ட அவர், உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கினார். இதையடுத்து தீ மளமளவெனப் பரவிய நிலையில், ஆம்னி வேன் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது.