நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் மிகவும் கீழ்த்தரமான அரசியலைக் காங்கிரஸ் செய்துகொண்டிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து உத்தரகாண்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது அரசியல் பிரச்னை அல்ல என்றும், ஊழல் வழக்கு என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் செய்துகொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.