சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து அவருக்கு பரிவட்டம் கட்டி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கட்சி அலுவலகத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவர் இருக்கையில் அண்ணாமலை அமரவைத்தார். அப்போது பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நயினார் நாகேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்தார்.