நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை. கடந்தாண்டு 12ம் வகுப்பு படித்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து காயத்தில் இருந்து மீண்டுவந்த சின்னத்துரை, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகே உள்ள பகுதிக்கு சின்னத்துரை நேற்று சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் சின்னதுரையிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் கட்டையால் தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சின்னத்துரை, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.