இந்தியாவில் இருந்து தற்போது 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும் எனவும் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப வளாகத்தில் பாரத பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் மீனவர்களின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.
மீனவர்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்திய மீனவர்கள் தற்போது 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மீன் ஏற்றுமதி செய்து வருவதாகவும், இது அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும் எனவும் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.