நாமக்கல்லில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலத்தின்போது போது திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், திமுக நிர்வாகிகளின் தூண்டுதலால் ஏலம் 3 முறை தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள், ஏலத்தை உடனடியாக தொடங்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.