திண்டுக்கல் அருகே இரண்டரை வயதுக் குழந்தைக்குச் சூடுவைத்ததாக அங்கன்வாடி ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் மகள் தர்ஷிகா ஸ்ரீ. இரண்டரை வயதான இவர், அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகிறார்.
இந்நிலையில், அங்கு பணியாற்றி வரும் செல்லம்மாள் என்பவர் தர்ஷிகா ஸ்ரீயின் கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், செல்லம்மாள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.