சேலம் மாவட்டம் வாழப்பாடியில் திமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பொதுக்கூட்டத்தின் மேடை போடப்பட்டிருந்ததால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும், பேரூராட்சிக்குச் சொந்தமான உயர்மின் கோபுரத்திலிருந்து மின்சாரத்தைத் திருடி பொதுக்கூட்டம் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.