புதுச்சேரியில் திருட்டு வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சோலை கவுண்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேலு, கார் திருட்டு வழக்கில் கைதாகி திருச்சி சிறையிலிருந்து கடந்த 4-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த இரண்டு நாட்களாகப் புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள மதுக் கடைகளில் மது அருந்திய அவர், அங்கு பூட்டியிருந்த அருள்மொழி என்பவரது வீட்டில் புகுந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாயைத் திருடினார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் அவரை போலீஸார் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்து காலாபட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.