நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விடியோ ஆதாரங்களைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேட்டியளித்ததாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீமான் நீதித்துறை குறித்துக் கண்ணிய குறைவாகப் பேசியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வேல்முருகன், சீமானின் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால், இதுவரை நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டி இருக்குமே எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இந்த வழக்கில் வீடியோ ஆதாரங்களைப் பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்பதாக கூறி விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.