சென்னையில் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள் ஜேசிபி மூலம் தனது கட்டடத்தை இடித்து விட்டதாக முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சென்னை வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்த பால்துரை, அதே பகுதியில் 200 ஆம் ஆண்டிலிருந்து 1,800 சதுர அடி கொண்ட காலி இடத்தை ஜனார்த்தனன் என்பவரிடம் இருந்து லீசுக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில் லீசுக்கு எடுத்துள்ள இடத்தை திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் ஆதரவாளர்கள் எனக்கூறிக் கொண்டு சிலர் கேட்டு மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சூரிய சிவப்பிரகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 30 பேர், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் ஷட்டரை இடித்து முதியவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.