நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரியில் உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் கல்லக்கொரை கிராமத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. அப்பகுதியில் உள்ள வீட்டில் வளர்ப்பு நாயை வேட்டையாடுவதற்காகச் சிறுத்தை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது.
சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், குடியிருப்புக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.