கோவையில் கல்லூரி மாணவி அனுப்ரியா தற்கொலை செய்துகொண்ட வழக்கைச் சந்தேக மரண வழக்காக காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த 14ம் தேதி சொந்த ஊரில் இருந்து கல்லூரிக்குச் சென்ற போது சக மாணவியின் பணம் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மனம் உடைந்ததாகக் கூறப்படும் மாணவி அனுப்பிரியா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் உயிரிழப்பைச் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.