தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக நடத்தப்பட்ட இவ்விழா தலைமை ஆசிரியர் இப்ராஹிம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்விழாவில் 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குப் பட்டம் மற்றும் பதக்கங்களை வட்டார கல்வி அலுவலர் வழங்கினார். தொடக்கப் பள்ளியில் பட்டமளிப்பு விழாவை நடத்திய தலைமை ஆசிரியர் இப்ராஹிம்க்கு பாராட்டுக்கள் குவிந்தன.