அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 28-ம் தேதி தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் எனக் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, வழக்கு தொடர்பான அனைத்து கருத்துகளையும் தெரிவிக்க மனுதாரர்களுக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.
அதன்படி, வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கவுள்ளது.
அதிமுக தரப்பிலும் தேர்தல் ஆணைய விசாரணையில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.