முன்னாள் ராணுவ வீரர்களைக் குறிவைத்து மோசடி செய்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.
ஈரோட்டில் “யூனிக் எக்ஸ்போர்ட்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நவீன் என்பவர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதை நம்பிய முன்னாள் ராணுவ வீரர்கள் பலர், இவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் கூறியது போலப் பணத்தைக் கொடுக்காத நவீன், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து 400க்கும் மேற்பட்டோர் ஈரோட்டில் உள்ள காவல் நிலையங்களில் புகாரளித்ததாகவும் ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் ராணுவ வீரர்கள், மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகாரளித்தனர்.