அசாமில் கொட்டி தீர்த்த பரவலான மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
கவுஹாத்தி, கரிம்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும், சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சில நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.