கடந்த 2022ம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஷேக் ஹிதாயத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரஹ்மான், ஷரண் மாரியப்பன் மற்றும் அபு ஹனிபா ஆகியோர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.
கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய சம்பவங்களில் இவர்களுக்கு பங்கு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இவர்கள் போலி கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் மற்றும் தேவையான கருவிகளை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 17 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.