கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 15ந் தேதி நள்ளிரவில் இருந்து அனைத்து வகையான சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தன.
கர்நாடக லாரி உரிமையாளர் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாள்தோறும் நான்காயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கர்நாடக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மீண்டும் 3வது கட்டமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும், எந்தெந்த கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.