பக்தர்கள் யாரும் வழிபட வருகை தராத நிலையில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நடை தரிசன நேரம் முடிந்து மீண்டும் அடைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று கோயில் திறக்கப்பட்டபோது பட்டியல் சமூக மக்கள் அங்கு வருகை தந்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் 2ம் நாளான இன்று மாற்று சமுதாய மக்கள் வழிபாடு நடத்துவதாக இருந்தது. ஆனால் காலை 6 மணி முதலே கோயிலுக்கு யாரும் செல்லாத நிலையில், தரிசன நேரம் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது.