முதலமைச்சர் மருமகனின் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காகவே தமிழக அரசின் விண்வெளி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுகோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் Vaanam Space LLP நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார் என்றும், இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலீடுகள் இல்லாததால் மாநிலம் தவித்து வருவதாகவும், ஆனால் சர்வாதிகார அரசு தனது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் தொழில்துறை கொள்கையை வெளியிட்டுள்ளது என்றும் அண்ணாலை கூறியுள்ளார்.