மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. தற்போது தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டமாக இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
இந்த புதிய கொள்கை வரும் கல்வியாண்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.