டெல்லியில் மலை போலக் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணி இரண்டு மடங்கு வேகமடைந்துள்ளதாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், டெல்லிக்குச் சுத்தமான காற்று மற்றும் தண்ணீரை வழங்குவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.
டெல்லியில் காணப்படும் குப்பைகள் மாநிலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்த அமைச்சர், இதுதொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.