போதைப் பொருளைப் பயன்படுத்தி விட்டு, தன்னிடம் அத்துமீறியதாக குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது, நடிகை வின்சி அலோசியஸ், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க, அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றும் சாராயு மோகன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலில் சாக்கோவிடம் கருத்து கேட்கப்படும் என்று அந்தக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
சாக்கோ இதற்கு முன்பு ஆலப்புழா போதைப்பொருள் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.