ஆடு ஜீவிதம் படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான கேரள அரசு சார்ப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில், நடிகர் பிருத்விராஜுக்கு ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார்.
சிறந்த இயக்குனராக ஆடு ஜீவிதத்தின் இயக்குனர் பிளஸ்ஸி விருது வென்றுள்ளார்.