சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீத்தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மருத்துமனையில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து செய்து காட்டப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், தீ விபத்தை தடுக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.