ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை நெருங்கியுள்ளதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது. அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பது அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். பிறகு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இந்த சூழலில்,, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை நெருங்கியுள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.