தென்காசி மாவட்டம் கடையம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பண்டாரக்குளம் பகுதியில் கல்குவாரி அமைக்க அண்மையில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை கண்டித்து வடமலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.