அமெரிக்கத் துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
தனது குடும்பத்துடன் இத்தாலி, இந்தியாவுக்கு நாளை முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
முதலில் இத்தாலி செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் மெலோனி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார். அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் அவர் டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ராவுக்குத் தனது குடும்பத்துடன் பயணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை வரும் 21-ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்கத் துணை அதிபரின் மனைவி என்ற கௌரவத்துடன் உஷா வான்ஸ் தனது பூர்விகமான இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறார்.