மயிலாடுதுறை அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி இருந்து எலந்தகுடிக்கு எம்.சாண்ட் ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. டிராக்டரை பிரவீன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில், டிராக்டரின் இடது புறத்தில் 16 வயது சிறுவன் திவாகர் அமர்ந்து சென்றுள்ளார்.
நெய்குப்பை பகுதி அருகே வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் திவாகர் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் லேசான காயமடைந்த பிரவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.