ரெட்ரோ படத்திற்கு யு/ஏ சான்றிதழைத் தணிக்கை குழு வழங்கியுள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.
இந்த நிலையில், திரைப்படத்திற்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 48 நிமிடம் 30 வினாடியாகும்.