கோவையில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக சக மாணவனின் ஆடியோ வெளியாகியுள்ளது.
கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்ற அனுப்பிரியா என்ற மாணவி மீது காணாமல்போன பணத்திற்காக வீண் பழி சுமத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனுப்பிரியாவுடன் விசாரணையை எதிர்கொண்ட மற்றொரு மாணவர், சக மாணவனுடன் பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், பணம் எடுக்கவில்லை எனக் கூறியும், அதை ஏற்காமல் அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் மணிமொழி கடுமையாகப் பேசியதாகக் கூறியுள்ளார்.
மேலும், கல்லூரி நிர்வாகம் கொடுத்த மன உளைச்சலால் அனுப்பிரியா தற்கொலை செய்திருக்கலாம் எனக் கல்லூரி மாணவர் பேசும் ஆடியோ தற்போது
வெளியாகியுள்ளது.