நாகையில் இருந்து ராமநாதபுரத்திற்குக் கடத்தப்படவிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதுக்கோட்டை வழியாக காரில் சென்றுகொண்டிருந்த அலெக்ஸை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், 8 கோடி ரூபாய் மதிப்பிலான 95 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அலெக்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.